கூத்தனூர் சரஸ்வதி
பல்லவி
கலைமகள் எனக்கென்றும் துணையிருப்பாள்
மலைமகள் அலைமகள் இருவரும் போற்றும்
அனுபல்லவி
நிலையிலா உலகில் நிலைத்திருக்கும் கேசவன்
நாபியில் வீற்றிருக்கும் மலரயன் ராணி
சரணம்
வலையென வார்த்தைகள் அழகுடன் கோர்த்து
கலைநயமும் கருத்தும் நிறைந்த கவிதைகள்
பலவும் பண்ணிசை நயமுடன் இயற்றிட
சிலையெனக் கூத்தனூர் தலத்தில் நின்றருளும்
No comments:
Post a Comment