விக்ன விநாயகன்
பல்லவி
அடைக்கலம் கணபதியே நீ அளிக்காவிடில்
அடிமைக்கு இவ்வுலகில் வேறு புகலேது
அனுபல்லவி
விடைவாகனன் மகனே விக்ன விநாயகனே
இடைக்குலத்துதித்த கேசவன் மருகனே
சரணம்
படைத்தும் காத்தும் உலகினை நடத்தும்
விடை காண வியலாத புதிராயிருப்பவனே
தடைகளை நீக்கும் ஆனைமுகத்தோனே
கடைக்கண்ணருள் தந்து காத்தருள்வாயே
No comments:
Post a Comment