உத்தமன் கேசவன்
பல்லவி
எத்தனை துன்பம் நீ எனக்களித்தாலும்
உத்தமனே கேசவா உனை நான் மறவேன்
அனுபல்லவி
நித்தமும் உனதிரு திருவடி பணிந்தேன்
சித்தத்திலிருத்தி உனையே துதித்தேன்
சரணம்
கத்தும் கடல் நடுவே பள்ளி கொண்டிருக்கும்
வித்தகனே விமலா வேத தத்துவனே
இத்தரையில் வினைப் பயனால் யான் படுந்துயர் நீங்க
ஒத்தாசை புரிந்திட உனை வேண்டி நின்றேன்
No comments:
Post a Comment