ஆனை முகத்தோன்
பல்லவி
தனிமையிலமர்ந்திருக்கும் ஆனைமுகத்தோனே
கனி மூன்றும் படைத்து உனை நான் துதித்தேன்
அனுபல்லவி
முனிவரும் தேவரும் நந்தியும் கணங்களும்
சனியுடன் கோள்களனைத்தும் வணங்கிடும்
சரணம்
பனிமலை நாதன் சங்கரன் மகனே
இனிய குழல் இசைக்கும் கேசவன் மருகனே
புனித மறை போற்றும் ஆதி முதல்வனே
இனிபிறவாதிருக்க எனக்கருள வேண்டுமென
No comments:
Post a Comment