ஆதிகேசவன்
பல்லவி
அனைத்தும் நீயே ஆதி கேசவா
உனையே துதித்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
பனையெனக்கவலையிடர்கள் வரினும்
தினையளவாய்ச் செய்யும் தீன சரண்யனே
சரணம்
ஜனனமும் மரணமும் அவரவர் செய்த
வினைப்பயனாலே விதிவசத்தாலே
அனவரதமுமுன் நாமமே போற்றி
தினம் பணிவோர்க்கு நலமளிப்பவனே
No comments:
Post a Comment