ஆராவமுதே
பல்லவி
ஓராயிரம் நாமம் சொல்லியழைத்தாலும்
பாரா முகம் ஏனோ சென்ன கேசவா
அனுபல்லவி
ஆராவமுதே திருக்குடந்தை அருட் கடலே
சாரங்கபாணியே உனைச் சரணடைந்தேன்
சரணம்
சேராத இடம்சேர்ந்து சிறுமதியால் தவறு செய்தேன்
தீரா வினைப்பயனால் திண்டாடியலைந்தேன்
நாராயணனே உனதருளால் மனம் திருந்தி
சீரான வாழ்வு பெற உன்னையே வேண்டி நின்றேன்
No comments:
Post a Comment