திருவேளுக்கை
பல்லவி
நாளுமுந்தன் சரணகமலங்களைப் பணிந்தேன்
வேளுக்கையில் விளங்கும் முகுந்தனாயகனே
அனுபல்லவி
தாளினைப் பணிந்தோர்க்கு தயவளிக்கும் கேசவனே
வேளுக்கை வல்லியின் மனங்கவர் மாதவனே
சரணம்
தாளேனே உந்தன் பாராமுகம் தன்னை
கேளாயோ எந்தன் மனக்குறைகள் உன் செவியில்
வாளாவிருப்பதென்ன மௌனம் உனக்கழகோ
ஏளனம் செய்யாமல் விரைந்தெனக்கருள்புரிவாய்
No comments:
Post a Comment