சங்கீத கணபதி
பல்லவி
சங்கீத கணபதியை சதுர்வேத நாயகனை
சங்கடமிடர் களையும் ஐங்கரனைப் பணிந்தேன்
அனுபல்லவி
பங்கய மலரேந்தும் சங்கரி புதல்வனை
பங்கய நாபன் கேசவன் மருகனை
சரணம்
செங்கதிரோநொளியை மிஞ்சுமொளியுடையவனை
சிங்கார வேலன் சோதரனைக் கரிமுகனை
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
மங்கள மூர்த்தியை ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment