ஸ்ரீ ஸ்ரீ மகாகணபதி
பல்லவி
சரணடைந்தேன் ஸ்ரீ மகா கணபதி
மரணம் பிறப்பென்னும் பவச்சுழல் நீங்கிட
அனுபல்லவி
கரங்களில் மோதகமும் பாசாங்குசமும்
வரம்தரக் காத்திருக்கும் அபயமும் காட்டுமுன்னை
சரணம்
நரர் சுரரும் நாரதரும் நந்தியும் கணங்களும்
சுரபதியும் ரதிபதியும் தேவசேனாபதியும்
அரனயனரியும் கடவுளர் அனைவரும்
கரம்பணிந்தேத்தும் பரம் பொருளுனையே
No comments:
Post a Comment