அக்ஷர கணபதி
பல்லவி
தமிழெழுத்தின் வடிவாய்க் காட்சி தரும் கணபதியை
அமுதீசர் மகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அமரரும் நந்தியும் கணங்களும் நான்முகனும்
குமரனுமிந்திரனும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
சமர் புரிந்தரக்கன் கயமுகனை அழித்தவனை
அமரருக்கமுதளித்த கேசவன் மருகனை
உமையும் உமையொரு பாகனும் கொஞ்சிடும்
சுமுகனை இடர் நீக்கும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment