திருமால்
பல்லவி
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
செங்கண் மாலே உந்தன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
மங்களம் தந்தருளும் திருமகளைத் திருமார்பில்
பாங்குடனே வைத்திருக்கும் மாதவனே கேசவனே
சரணம்
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தும்
பங்கய நாபனே புண்டரீகாக்ஷனே
மங்காத புகழ்மேவும் துவாரகை அதிபனே
எங்களைக் காத்தருள வேண்டுமெனத் துதித்தேன்