ஓராயிரம் பெயர்…..
பல்லவி
ஓராயிரம் பெயர் உண்டென்ற போதும் நான்
நாராயணாவென்றே விரும்பியுனையழைத்தேன்
அனுபல்லவி
ஆராவமுதே கேசவா அதற்கிணை
வேறோர் நாமம் பூமியில் வேறில்லை
சரணம்
நாராயணனே நமக்குப் பறை தருவானென
கார்குழலாள் கோதையுமுன் நாமமேயுரைத்தாள்
பேரருளாளன் நீ பெரிய பெருமாளும் நீ
சாரங்கபாணியும் நீ சர்வலோக நாயகனும் நீ
No comments:
Post a Comment