கண்ணனைக் காணாத…….
பல்லவி
கண்ணனைக் காணாத கண்ணென்ன கண்ணோ
கண்ணனைப் பாடாத நாவென்ன நாவோ
அனுபல்லவி
தண்மதி மகமுடைய தாமரை நாபனை
வண்ணங்கள் பல காட்டும் மாதவனைக் கேசவனை
சரணம்
மண்ணையுண்ட வாயனை மதுசூதனனை
வெண்ணையைத் திருடி உண்ணும் தாமோதரனை
தண்ணார் கோபியரின் மனங்கவர்ந்த சீதரனை
எண்ணி மனம் குளிர்ந்து பரவசித்து த்துதித்து
No comments:
Post a Comment