கேட்டேன்!ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!
On listening to the tune , I penned these lines💐
நான் மழலை…..
பல்லவி
நான் மழலை உன் மடி மீதினிலே
வான் நிலவே என் தாயே காமாக்ஷி
அனுபல்லவி
ஊனுயிரை எனக்களித்தவள் நீயே
தேனினுமினிய கேசவன் சோதரியே
சரணம்
கானுறை முனிவர் தவயோகியர் மற்றும்
வானுறை தேவரனைவரும் வணங்கும்
மான் விழியாளே அழகு மலர்க்கரத்தாளே
யானுனைத் துதித்தேன் எனக்கருள்வாயே
No comments:
Post a Comment