எங்கும் நிறைந்திருக்கும்……
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீரகு ராமனை
லெமாண்ட் நகரில் கண்டு துதித்தேன்
துரிதம்
சங்கும் சக்கரமும் சாரங்கமும் கதையும்
நந்தகமுமேந்தும் கோசலைப் புதல்வனை
அனுபல்லவி
வெங்கதிரோன் குலவிளக்கை கேசவனை மாதவனை
பங்கய நாபனைப் பாற்கடல் வாசனை
சரணம்
பங்கய முகத்தாள் ஜானகியும் இலக்குவனும்
தங்கி உடனிருந்து அழகுடன் காட்சி தர
மங்களமாய் எதிர அனுமன் நின்றிருக்க
சங்கரன் போற்றிய கோதண்டபாணியை
No comments:
Post a Comment