எனக்கருள வேண்டினேன்….
பல்லவி
எனக்கருள வேண்டினேன் மாயனே மணிவண்ணா
உனக்கேன் தயக்கமின்னும் நீலவண்ணக் கண்ணனே
தனம் புகழ் போகம் எதுவும் நான் கேட்கவில்லை
உனது கடைக்கண்ணருள் மட்டுமே போதுமென
தினமுனைப் பாடும் ஆண்டாளும் நானல்ல
கணமுமுன் நாமம் சொல்லும் நாரதனுமல்ல நான்
கனவிலுமுனை நினைக்கும் கோபியரும் நானல்ல
தனம் தேடி அவல் தந்த குசேலனுமல்ல நான்
அனுமனுமல்ல நான் மார்பினைப் பிளந்து காட்ட
பலன் நோக்காமலுன் கடமை செய் என நீ சொல்ல
தனஞ்செயனும் நானல்ல கேசவனே பரந்தாமா
மனதிலுனை நொடிப்பொழுது எண்ணி மறுவேலை பார்க்கும்
No comments:
Post a Comment