தீராவினை தீர்க்கும்…..
பல்லவி
தீராவினை தீர்க்கும் திருவருள் சேர்க்கும்
நாராயணாவெனுமுன் நாமம் மட்டுமே
அனுபல்லவி
பாரோர் பணிந்தேத்தும் ஏராளம் நாமங்களில்
நாராயண நாமமே கேசவா சிறந்தது
சரணம்
மாறாத பக்தியுடன் பிரகலாதனழைத்தவுடன்
வீராவேசமுடன் தூணினைப் பிளந்து வந்த
நாராயணனுன் நாமமே அனைத்திலும் சிறந்தது
ஏராளம் நாமங்களில் நாராயணனே நனி சிறந்தது
ஈராறு முகமுடைய கார்த்திகேயனும்
வாரணமுகனும் கொண்டாடும் திருநாமம்
நீராறும் கடலுடுத்த நிலமடந்தை போற்றும் திருநாமம்
ஓராயிரம் நாமங்களில் உயர்ந்த திருநாமம்
No comments:
Post a Comment