தேடி உன் பதம்…..
பல்லவி
தேடி உன் பதம் பணிந்து பரவசித்தேன் தாயே
வேடிக்கை பார்க்காமல் எனக்கருள்வாய் நீயே
அனுபல்லவி
பாடிக் களித்தேன் கேசவன் சோதரி
கோடி வினை தீர்க்க இதுவே தருணம்
சரணம்
ஆடிக் களைத்து விட்டேன் அம்மா என்னால் இனி
ஆட முடியாது ஆடினது போதுமென ஓய்வளிக்க
நாடி உனையே துதித்தேன் தேவி பராசக்தி
ஓடி வந்தெனக்குன் ஆதரவு தந்திடுவாய்
No comments:
Post a Comment