ஈச்சனாரி கணபதி
பல்லவி
தடைகளைக் களைந்திடும் அருள்மிகு கணபதியை
ஈச்சனாரித் திருத்தலத்தில் கண்டு வணங்கினேன்
அனுபல்லவி
படை நடத்தி அரக்கன் கஜமுகனை அழித்தவனை
இடைக்குலத்துதித்த கேசவன் மருகனை
சரணம்
விடை வாகனன் மகனைக் கந்த சோதரனை
இடைதனில் பாம்பணிந்த வேழமுகத்தோனை
மடைதிறந்த வெள்ளமெனக் கருணைமழை பொழிபவனை
குடையின் கீழ் நின்று பக்தருக்கருள்பவனை
வேதங்கள் போற்றும் ஆதி தேவனை
அல்லல் வல்வினை போக்கும் ஆனைமுகத்தோனை
முத்தொழில் புரிந்திடும் மூவருக்கும் முதல்வனை
முழுமுதற்கடவுளை மோதகப்பிரியனை
No comments:
Post a Comment