கன்னிகா பரமேச்வரியின்.....
பல்லவி
கன்னிகா பரமேச்வரியின் பாதம் பணிந்தேன்
என்னிடம் இருந்த பாவங்கள் தொலைந்திட
அனுபல்லவி
தன்னிகரில்லாத திரிபுரசுந்தரி
பன்னக சயனன் கேசவன் சோதரி
சரணம்
புன்னகை தவழும் சந்திர முகத்தினள்
இன்னிசைக் கலைகளை ரசித்திடுமீச்வரி
தன்னடி தொழுதிடும் அடியவர்க்கெல்லாம்
நன்னலமளித்திடும் அகிலாண்டேஸ்வரி
துரிதம்
நரர்சுரர் நாரதர் நான்முகனரனரி
சுரபதி ரதிபதி கணபதி முருகன்
சரச்வதி திருமகள் மலைமகளனைவரும்
கரம் பணிந்தேத்தும் ஆதிபராசக்தி
No comments:
Post a Comment