நாராயணனே .....
பல்லவி
நாராயணனே நான் வணங்கும் கடவுள்
ஓராயிரம் பெயர் உடையவன் திருமால்
துரிதம்
நாரதர் அரனயன் சுரபதி ரதிபதி
சுகசனகாதியர் கணபதி குமரன்
மாருதி எண்திசை பாலர்கள் முனிவர்கள்
யாவரும் வணங்கி கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
ஆராவமுதனவன் சாரங்கபாணி
தீராவினை தீர்க்கும் திருவரங்கநாதன்
சரணம்
காரார் குழலாள் திருவென்னும் பெயராளை
மார்பினில் வைத்திருக்கும் மாதவன் மதுசூதனன்
மாரனையீன்றவன் பாற்கடல் வாசன்
கோர கலி தீர்க்கும் சென்ன கேசவன்
No comments:
Post a Comment