வேங்கடரமணன் ......
பல்லவி
வேங்கடரமணன் ஶ்ரீ பாலாஜியை
பாங்குடனே துதித்து பரவசமெய்தினேன்
துரிதம்
கணபதி நான்முகன் நாரதருந்திரன்
சுகசனகாதியர் அனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
நீங்காத செல்வமும் நிறைவான வாழ்வும்
தீங்கின்றி எனக்களிக்கும் பத்மாவதி போற்றும்
சரணம்
ஓங்கி உலகளந்த வாமனனைக் கேசவனை
பூங்குழலாள் திருமகளைத் திருமார்பில் தாங்கி
தூங்காமல் தூங்கும் பாற்கடல்வாசனை
ஓங்கு புகழ்மிகு கோமந்தகத் திருப்பதியில்
அருமையாக இருக்கின்றது சார்
ReplyDelete