கரம் பணிந்தேன்......
. பல்லவி
கரம் பணிந்தேன் ஶ்ரீ பாலாஜி
பரகதியளித்தெனையாண்டிட வேண்டியே
துரிதம்
சுரபதி ரதிபதி கணங்களின் அதிபதி
பசுபதி துதித்திடும் வெங்கடாசலபதி
அனுபல்லவி
நரர்சுரர் நாரதரும் சுகசனகாதியரும்
பிரமனும் போற்றும் மாலனே கேசவா
சரணம்
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தி
வரங்களை அடியார்க்களித்திடக் காத்திருக்கும்
பரமதயாகரனே பத்மாவதி நாயகனே
அறம் தழைக்கும் கோமந்தகத் திருத்தலதுறைபவனே
ராகம்: மோகனம்
தாளம்: ஆதி
No comments:
Post a Comment