நினைத்தேன் ! எழுதுகிறேன் !!
ஏதாவது சிறப்பா எழுதணும்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.
ஆனா ஒண்ணுமே தோணல. மைண்ட் ஒரே ப்ளாங்க்கா இருக்கா மதிரி நினைக்கிறேன்.
இருந்தாலும் ஒண்ணுல ரெண்டு பார்ததுடுவோம்னு துணிஞ்சு இறங்கிட்டேன். இந்த
மத்யமர்ல ஆனாலும் ரொம்ப பேர் அது இதுனு எழுதிப் பதிவு போடறா. சிலது கொஞ்சம்
சுமார் அல்லது மொக்கைன்னாலும் பெரும்பாலும் நிறைய நல்லாவே இருக்கு. நிறைய பேர்
தங்களோட வழ்க்கைல நடந்ததை, அல்லது நடந்தா மாதிரி தோணறதை, இல்ல
அனுபவிச்சதை அல்லது அனுபவிக்க நினைக்கறதை பற்றி சுவையா எழுதி விடுகிறார்கள்.
சிலது மிகை படுத்திய கற்பனையாகவோ சுவைக்காக சேர்த்த சரக்காகவோ கூட
இருக்கலாம் . ஒண்ணுமில்லாத்ததைக் கூட எழுத்து சாமர்த்தியத்தினால அழகா,
நயம் பட சுவையா பதிவிடுகிறார்கள். படிக்க நன்னாயிருந்தா தப்பொண்ணுமில்லை. சில உண்மை விளம்பிகள் அப்பாவிகள் பாவம் அவரவர்கள் வாழ்வில் நடந்ததை நடந்தபடி எழுதி பெரும்பாலும் கையடி( ஐ மீன் லைக்ஸ்)பெருகிறார்கள் . அந்த வகையில இந்த மத்யமர் என்கிற குரூப்புக்கு நன்றி சொல்லத்தான் வேணும். ஆத்தில சும்மா இருக்கற பொம்மனாட்டிகளக் கூட
உசுப்பேத்தி ஏதாவது எழுத ஆர்வத்தை தூண்டி அவாளுக்குள்ளே ஒளிஞ்சு இருக்கற
திறமையை “ லேடண்ட் டேலண்ட்டை” ( மன்னிச்சுக்கோங்கோ சரியான தமிழ்
வார்த்தைகள் கிடைக்கலை) வெளிக்கொணருவதில் பெரும் பங்காற்றுகிறது.
இதப் படிச்சவுடனேயே நவீன பெண்மணிகள் எல்லாரும் கச்சை கட்டிக்கொண்டு
என்னை ஒரு “ Male chauvinist pig” ( சாரி இங்கும் தமிழ் இடிக்கிறது) என்று கருவிக்
கொண்டு கல்லெறிய, சண்டைக்கு வர வேண்டாம். நானப்படிப்பட்டவனல்லன்.
நான் பாரதி கண்ட புதுமைப் பெண்டிருக்கு ஆதரவாளன்தான் எனக் கூறிக்கொள்ள
விரும்புகிறேன். நவீன நாரீமணிகள் என் பால் கருணை கொள்ளுங்கள்.
அட நான் எழுத வந்ததை விட்டு விட்டு எங்கோ தடம் மாறிப் போயிட்டேனோ!
தவிரவும் என்ன எழுதினா, எந்த மாதிரி எழுதினா நிறைய லைக்ஸ் வரும், அப்பறம்
மத்யமர்ல எதுக்கு எப்பிடி எழுதினா இந்த POTW, இல்ல அதுக்கும் மேலானது
குடுப்பா என்றெல்லாம் பின் மண்டையில் ஓடி இடைஞ்சலா இருக்கு. ஏதாவது சொந்த
அனுபவத்தை எழுதலாம்னா. ஒண்ணுமே சுவையானதாக தோணல. ஏதாவது டாப்பிகல்லா
இன்டரஸ்டிங்கா எழுதலாம்னா அதெல்லாம் நிறைய ப்ரிண்ட் மீடியால, இன்டர்நெட்ல
வந்திருக்கமே நாமென்ன புதுசா சொல்லிடப் போறோம்னு யோசனையா இருக்கு.
சரி மேற்படி யோசித்ததே இவ்வளவு எழுதியாச்சு. இன்னும் சுவையா நல்ல விஷயம்
எழுதணும்னா நிறைய எழுதணும். ஆனா மத்யமர் குரூப்ல எவ்வளவு நீளம் ,வரிகள்
வரலாம்னு தெரிஞ்சிண்டு பிறகு எழுதிப் பதிவுப் பண்ணலாம்னு இதோட நிறுத்திக்கிறேன்.
இதுவே மத்யமர்ல போடறதுக்கு அளவு தரமா இருக்கோ இல்லை. இந்த பதிவுகள் போட
என்ன தரம் இருக்கணும் எது ஸ்டாண்டர்ட்னு எப்பிடி யார் தீர்மானம் பண்ணுவானும்
தெரியல. ம், சரி, கர்மண்யேவ அதிகாரஸ்த்தே மா பலேஷு கதாசன ( எடுத்த கர்மத்தை
செய்; பலனை எதிர்பாராதே) என்ற கீதா வாக்கியப்
படி நம்ம எழுதரத எழுதியாச்சு. இனிமே எல்லாம் அவா பொறுப்பு!
**************
No comments:
Post a Comment