சக்தி விநாயகன்
பல்லவி
வினைகளைக் களைந்திடும் சக்தி விநாயகனே
உனையே துதித்திடும் எனக்கருள் புரிவாய்
துரிதம்
முனிவரும் தேவரும் கணங்களும் நந்தியும்
மனிதரும் மூவரும் கரம் பணிந்தேத்திடும்
அனுபல்லவி
அனைத்துலகும் படைத்து காத்திடும் கணபதியே
உனக்கிணை இவ்வுலகில் வேறு யாருள்ளார்
சரணம்
சதுர்த்தியில் தோன்றிய அதிசய வடிவினனே
சதுர்மறை போற்றும் ஓங்காரப் பொருளே
சதுர்முகன் கர்வம் தீர்த்தவனே ஐங்கரனே
சதுர்புஜனே இந்தினிளம்பிறையணிந்தவனே
யதுகுல நந்தனன் கேசவன் மருகனே
மதிசேகரன் மகனே மதவாரணமுகனே
துதித்திடுமடியார் துயரிடர் களைபவனே
துதிக்கையனே தும்பிமுகப்பெருமானே
No comments:
Post a Comment