வேதசாரமே.....
ஸ்ருதி ஸ்ம்ருதி புரணேஷு ராமநாம ஸமீரிதம்
தந்நாம கீர்த்தநம் பூய தாபத்ரய விநாஸநம்.
வேதம் ஸ்ம்ருதி புராணம் இவைகளிலே ராம நாமத்தின் ப்ரபாவம் நன்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய ராம நமாவை ஸங்கீர்த்தநம் செய்பவர்களுக்கு ஆதயாத்மிகம்,ஆதிபௌதிகம்,ஆதிதைவிகம் என்ற மூவகைத் தாபங்களும் அகன்று விடும் என்பது திண்ணம்.
பல்லவி
வேதசாரமே ராம நாமமே
ஆதியந்தமும் அனைத்துமாயின
அனுபல்லவி
காதினில் கேட்டு மனமாரத்துதிப்பவர்க்கு
சாதல் பிறப்பெனும் பவச்சுழல் விலகிடும்
சரணம்
மேதினி கொண்டாடும் கேசவனவனது
தீதொன்றுமில்லாத திருநாம மதுவே
ஓதித்துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
யாதொரு குறையும் அணுகாமல் காத்திடும்
தூதனாய்ச் சென்ற ஆஞ்சநேயனும்
சீதையும் அனுதினம் துதித்திடும் நாமம்
பாதிமதியணிந்த பரமசிவன் பார்வதிக்கு
தோதாகத் துதித்திட உரைத்த திருநாமம்
No comments:
Post a Comment