தாயே நீயே......
பல்லவி
தாயே நீயே கைவிட்டால் வேறெவரிடம் முறையிடுவேன் காமாக்ஷி
அனுபல்லவி
மாயே மண்ணுருவில் மகேசன் போற்றும் ஏகாம்ப்ரேச்வரி கேசவன் சோதரி
சரணம்
வாயாலும் உன் பெயரைச் சொல்ல மறந்தேன்
தீயோருடன் சேர்ந்து ஓயாமல் வஞ்சம் புரிந்தேன்
நோயான மூப்பில் விழுந்த பின் உணர்நதேன்
தூயோனாய் மனம் திருந்தி உனைப் பணிந்தேன்
No comments:
Post a Comment