ஏகாம்ப்ரேச்வரி ....
பல்லவி
ஏகாம்ப்ரேச்வரி காமாக்ஷி உன்றன் அரவிந்த பதம் பணிந்தேன்
ஶ்ரீகாஞ்சிபுர நிவாசினி மனம் கனிந்து நீயெனக்கருள்புரி
அனுபல்லவி
ஏகாம்ப்ரேச்வரர் சுந்தரேஸ்வரர் மனம் மகிழ் சிவகாமேச்வரி
மூகசங்கரர் போற்றிப் பாடிய நித்யகல்யாணி கேசவன் சோதரி
சரணம்
காமக்ரோதாதி அறுபகை களைந்திடும் கௌரிமனோகரி
ஆகமவேத சாஸ்த்திரபுராணி அன்னபூர்ணேச்வரி
யாகயோகபோகஸ்வரூபிணி மாதா புவனேச்வரி
ராகசங்கீத நாநயோகினி (ஶ்ரீமகா) திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment