காமகோட்டம்தனில்...
பல்லவி
காமகோட்டம்தனில் வளர் காமாக்ஷி
காஞ்சீபுரவாஸினி ஏகாம்ப்ரேச்வரி
அனுபல்லவி
சாமவேதம்தனில் மனம் மயங்கிடும்
சர்வேச்வரி சங்கரி கேசவன் சோதரி
சரணம்
காமக்ரோதாதி அறுபகையகலவுன்
நாமம்தனைப்பாடி தமிழ்ப்பண்ணிசைத்தேன்
மாமறை போற்றும் திரிபுரசுந்தரி
தாமதமின்றியே எனக்கருள்வாயே
No comments:
Post a Comment