கருணைக்கடலே.....
பல்லவி
கருணைக் கடலே அருணாச்சலனே
பெருமைக்குரிய ரமணர் போற்றிய
அனுபல்லவி
இருவினையகற்றும் கேசவன் நேசனே
திருவண்ணாமலை தனில்திகழ் சோதியே
சரணம்
கிரிவலம் புரிந்திடும் பக்தருக்கெல்லாம்
திருவருள் தந்திடும் மாதொருபாகனே
உன் புகழ் பாடி உனதருள் வேண்டி
இருகரம் கூப்பி அனுதினம் பணிந்தேன்
No comments:
Post a Comment