வேழமுகன்
பல்லவி
விநாயகனை ஆனை முகத்தோனை
அனாத நாதனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சனாதன தர்மம் பூமியில் தழைத்திட
வினோத வேழ முகத்தோனாயவதரித்த
சரணம்
பிநாகபணி ஈசன் மைந்தனை
தனாதிபதியின் கர்வம் தீர்த்தவனை
அநேகம் பெயருடைய கேசவன் மருகனை
கணேசமூர்த்தியை கந்த சோதரனை
சுநாத சங்கீதக் கலைகளை ரசித்திடும்
கணாதிபனை கணங்களின் தலைவனை
வினாடிப் பொழுதுமவன் நாமமே நினைந்து
கனாவிலுமவனை மறவாத மனம் வேண்டி
கணாதிபனை கணங்களின் தலைவனை
வினாடிப் பொழுதுமவன் நாமமே நினைந்து
கனாவிலுமவனை மறவாத மனம் வேண்டி
No comments:
Post a Comment