உலகாண்டநாயகியே.....
பல்லவி
உலகாண்ட நாயகியே உமையே கௌரி
உன்னருளைப் பெற வந்தேன் வரமே கோரி
அனுபல்லவி
பலகாலம் பவக்கடலில் மூழ்கியிருந்தேனே
பாவங்கள் தீர்த்தெனையே கரைசேர்ப்பாய் தாயே
சரணம்
அருள் ஞான மோனத்தவயோக சிவனார்
திருவானைக் காவிலமர் அகிலாண்டவல்லிக்கும்
அருகிலுறை நந்தி சம்பு மாதவர்க்கும்
அருள் கூர்ந்து மெய்ஞானம் அளித்ததையுமறிந்து
No comments:
Post a Comment