சித்தம்......
பல்லவி
சித்தம் இரங்காதோ உத்தமியே காமாக்ஷி
நித்தமுனை நினைந்துருகும் அடிமையெனக்கருள
அனுபல்லவி
அத்தன் ஏகம்பன் மண்ணுருவில் பணியும்
நித்திலமே புவி போற்றும் கேசவன்சோதரி
சரணம்
எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே சலித்தேன்
பித்தனைபோல் திரிந்தேன் பழவினையாழுழன்றேன்
அத்தனையும் போதுமென ஏழையேன் முறையிட்டேன்
இத்தனையுமறிந்து மெத்தனமேன் அருள்புரிய
No comments:
Post a Comment