ஏழையெனக்கருள.......
பல்லவி
ஏழையெனக்கருள உனக்கென்ன தயக்கம்
தாயே ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
ஆழ்கடலுள் துயிலும் கேசவன் சோதரி
ஊழ்வினையால் நான் படுந்துயரங்கள் களைந்து
சரணம்
கொடியிடையாளே மதிமுகத்தினளே
பிடியின் துதிக்கை போல் தொடையுடையாளே
மடிவைத்து சிவன் கொஞ்சும் வடிவுடையாளே
அடிமலர் பணிந்துனை அனுதினம் துதித்திடும்
No comments:
Post a Comment