புற்றிடம் கொண்டானின்..........
பல்லவி
புற்றிடம் கொண்டானின் அரவிந்தமலர்ப் பதம்
பற்று நீங்கவே பற்றித் துதித்தேன்
அனுபல்லவி
பெற்ற தாயும் தந்தையும் குருவும்
உற்றதுணையும் அவனென நினந்து
சரணம்
நற்றவமுனிவரும் தேவரும் கணங்களும்
கற்றறிந்தோரும் கரம் பணிந்தேத்தும்
சிற்றம்பலவாணன் திருவாரூர் தலம் வளர்
பிற்றன் பேயன் கேசவன் நேசன்
No comments:
Post a Comment