பூவனூர் கல்யாணியம்மன்
பல்லவி
கல்யாணி அம்மனை மனமாரத் துதித்தேன்
கைலாசநாதர் உடனிருந்து போற்றும்
அனுபல்லவி
அல்லலிடர் களையும் கேசவன் சோதரி
செல்வம் குலம் கல்வி நல்வாழ்வுமளித்திடும்
சரணம்
வல்லரக்கரையழித்து நல்லவரைக் காத்த
மெல்லிடையாளை அகிலாண்டேஸ்வரியை
சொல்லுக்கடங்காத வடிவுடையாளை
நல்லடியார் பலர் வாழும் பூவனூர் தலத்துறையும்
No comments:
Post a Comment