சாரதி நீயே..........
பல்லவி
சாரதி நீயே தயை புரிவாயே
காரமர் மேனியனே கேசவனே- பார்த்த
அனுபல்லவி
நாரதாதி முனிவரும் தேவரும்
பாரனைத்தும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
பாரினில் பிறந்த நாள் முதலாக
நாரணனே உந்தன் நாமமுரைத்திலேன்
மாறி மனம் திருந்தி இன்றுனைப் பணிந்தேன்
கோர சம்சாரக்கடலினைக் கடந்திட
No comments:
Post a Comment