சரஸ்வதி உனையே.....
பல்லவி
சரஸ்வதி உனையே சரணடைந்தேனே
கல்வியும் ஞானமும் கலைகளும் பெறவே
அனுபல்லவி
நரர்சுரர் நாரதர் கேசவன் சோதரி
திருமகள் பிரமன் அனைவரும் துதித்திடும்
சரணம்
வெண்கலையுடுத்திடும் வேதப்பொருளே
வெள்ளைதாமரையில் வீற்றிருப்பவளே
கரங்களில் வீணையும் பாசாங்குசமும்
ஏந்தியே பொலிவுடன் காட்சிதரும் கூத்தனூர்
No comments:
Post a Comment