பூவனூர் கோதண்டராமன் வீதி உலா
பல்லவி
கோலமிகு கோதண்டராமன் பூவனூர்
திருவீதி வலம் வரும் கோலம்காண வாரீர்
துரிதம்
ஆலமுண்ட கண்டன் நீலகண்டன் போற்றும்
ஞாலமுண்டவாயன் கோசலபாலன்
அனுபல்லவி
நீலவண்ணன் தாளளவு நீண்டகையுடையோன்
தோள்கொடுத்து சுக்ரீவன் துயர்களைந்த மாவீரன்
துரிதம்
சீதாலஷ்மண ஆஞ்சநேயர் போதேந்திரரும் மனம்மகிழ
ஆதவகுலத்துதித்த குணசீலன் மாலன் கருணாலவாலன்
சரணம்
களிப்புடன் கருடன் மீதமர்ந்து வண்ண
விளக்கொளியும் கூசும் காந்தியுடன் திகழும் (கோலமிகு..)
அளப்பரிய கருணையுடன் ஆஞ்சநேயர் தோளமர்ந்து
பளபளக்கும் பட்டுடையும் அலங்காரம் புனைந்திருக்கும் (கோல..)
குளம்புயரத்தூக்கி நிற்கும் குதிரைவாகனமமர்ந்து
எளிமையுடன் பக்தருக்கு உளம் குளிர காட்சி தரும் (கோல...)
ஒளிவீசும் அணிமணிகள் மலர்மாலைகள் சூடி
விண்ணவரும் கேசவனும் கண்குளிரக் காணும் ( கோல..)
No comments:
Post a Comment