பரிகாசம் ஏனய்யா...
பல்லவி
பரிகாசம் ஏனய்யா கேசவா
புரியாதவன் போல் சிலையாக நின்று
அனுபல்லவி
பரிந்தருள் பெறவேண்டி பாடிடும் எனையே
தெரியாதவன் போல் பாவனை கொண்டு
சரணம்
தரித்திரன் குசேலன் கேட்காமலே
கருணையுடன் பொருள் அள்ளி அளித்தாய்
கரிராஜன் அழைத்ததும் விரைந்து சென்றாய்
சரி நிகரிவருக்கு நானும் இல்லையா
No comments:
Post a Comment