சங்கரி ஶ்ரீ.......
பல்லவி
சங்கரி ஶ்ரீலலிதா திரிபுர சுந்தரி
பங்ஙகய பதம் பணிந்தேன் பரிந்தெனக்கருள்புரி
அனுபல்லவி
பொங்கரவுக்குடையின் கீழ் மங்களமாய்க்காடசிதரும்
சிங்காரவடிவினளே சீதளா தேவியே
சரணம்
கங்கையும் திங்களும் சூடிய ஈசனின்
பங்கிலுறைபவளே உமாமகேச்வரி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் சோதரி
நங்கநல்லூர் வளர் ராஜராஜேஸ்வரி
No comments:
Post a Comment