பதம் பணிந்தேன் ஶ்ரீ பத்மநாபா....
பல்லவி
பதம் பணிந்தேன் ஶ்ரீ பத்மநாபா
சதமுனது திருவடி நிழலே என்றறிந்து
அனுபல்லவி
விதம் விதமான உற்றமும் சுற்றமும்
சதமல்ல என்றே மாலனே கேசவா
சரணம்
கதம்பமலர் மாலை மணிமாலை சூடி
நிதம்பம்தனில் பட்டாடைகள் அணிந்து
இதமுடன் பக்தருக்கருள் தரவென்றே
புதுப்பொலிவுடனே காட்சி தருமுந்தன்
No comments:
Post a Comment