அருள்மிகு அமிர்த........
பல்லவி
அருள்மிகு அமிர்தகடேச்வரனைப் பணிந்தேன்
கருணை நிறைந்த அபிராமி உடனிருக்கும்
துரிதம்
நரர்சுரரும் நான்முகனும் கதிரவனும் மதியும்
நந்தியும் கணங்களும் அனைவரும் போற்றும்
அனுபல்லவி
திருத்தங்கும் மார்பன் கேசவன் நேசனை
திருக்கடையூர்வாசனைக் காலகாலனை
சரணம்
வருந்தித் துதித்திடும் நல்லடியார்களுக்கும்
அருந்தவம் புரிந்திடும் முனிவர்க்கும் ஞானியர்க்கும்
மருந்தென விளங்கிடும் ஐந்தெழுத்தானை
கருணாகரனை நமச்சிவாயனை
No comments:
Post a Comment