வழிப்போக்கன்
நானொரு வழிப்போக்கன்
நாடும் வீடும் எனக்கிங்கில்லை
காடும் மலையும் வயலும் வெளியும்
ஓடும் நதியும் செடி கொடி கடலும்
அனைத்துமென் சொந்தம்
போகுமிடமும் புறப்பட்ட இடமும்
ஏதும் அறியேன் அறியவும் வேண்டேன்
இருப்பது இங்கே இதுமட்டும் அறிவேன்
போவது எங்கே சென்றதும் அறிவேன்
தேடுவதொன்றொரு பொருளுமில்லை
தேடாமலிருப்பது எதுவுமில்லை
ஆடிய ஆட்டம் அடங்கிய பின்னே
கூடு நீங்கிப் பிரிந்து போவேன்......
No comments:
Post a Comment