செண்பகவல்லியை.....
பல்லவி
செண்பகவல்லியை மனமாரத் துதித்தேன்
செண்பகவனத்தமர் தண்மதி முகத்தினளை
அனுபல்லவி
விண்ணகரப் பெருமாள் நாதநாதன் மணிமார்பில்
கண்கவர வீற்றிருக்கும் கேசவன் நாயகியை
சரணம்
விண்ணாளும் இந்திரனும் தேவரும் முனிவரும்
மண்ணுலக மாந்தரும் நந்தியும் நான்முகனும்
எந்நாளும் துதிக்கும் கடலன்னை திருமகளை
பண்ணிசைத்துப் பாடி பாமாலை சூடி
No comments:
Post a Comment