கமலநாதனை....
பல்லவி
கமலநாதனை சிவன் சாபம் தீர்த்தவனை
திருக்கண்டியூர்த் தலத்தில் கண்ணாரக்கண்டேன்
அனுபல்லவி
கமலமலர் வனமெனத் திகழும்
கமலநாபனை அமலனைக் கேசவனை
சரணம்(துரிதம்)
அமரரும் முனிவரும் அனுமனும் கருடனும்
கமலாலயனும் சனகாதியரும்
அமரேந்திரனுடன் அகத்தியர் நாரதர்
கமலவல்லியும் துதித்துப் போற்றும்
No comments:
Post a Comment