தாமரைப்பூவிலமர்....
பல்லவி
தாமரைப்பூவிலமர் கண்ணபுரநாயகியை
மாமறைபோற்றும் மகாலக்ஷ்மியை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
நாமகள் மலைமகள் நாரதர் நான்முகன்
கண்வரும் தண்டகமுனிவரும் வணங்கிடும் பதத்தினளை
சரணம்
நீங்காத செல்வமும் நிறைவான நல்வாழ்வும்
ஓங்கு புகழும் உயர் கல்வியும் ஞானமும்
தீங்கு நினையாத நல்லடியார் நட்பும்
பாங்குடனே நல்கும் கேசவன் துணைவியை
தாளம்: சங்கீர்ண ஏகம்
No comments:
Post a Comment