அருட்கரம்.....
பல்லவி
அருட்கரம் நீட்டும் சௌரிராஜனை
இருகரம் கூப்பி பிரார்த்தனை புரிந்தேன்
துரிதம்
திருமகள் நிலமகள் பத்மினி கோதை
தேவியர் நால்வரும் அனுதினம் துதித்திடும்
அனுபல்லவி
திருமுடியுடன் நின்று அடியார்க்கருளிய
திருமாலைக் கேசவனை கணப்புரத்துக் கருமணியை
துரிதம்
தேவரும் மூவரும் தண்டக முனிவரும்
கண்வரும் கருடனும் கோள்களும் பணிந்திடும்
சரணம்
மன்மதன் மயங்கிடும் பேரெழில் படைத்தவனை
கன்னலை இன்னமுதை மனதிற்கினியவனை
முன்னம் தென்னிலங்கை அரக்கனை மாய்த்தவனை
கண்ணபுரத்தம்மானை நீலமேகப் பெருமாளை
துரிதம்
எட்டெழுத்து மந்திரமாய் சுட்டெரிக்கும் செஞ்சுடராய்
நிலம் நீர் நீள்விசும்பாய்க் காற்றுமாகி நின்றானை
No comments:
Post a Comment