Wednesday, 16 January 2019

தாய்லாந்தில் தங்க புத்தர்!







தாய்லாந்தில் தங்க புத்தர்!



1957ல் தாய்லாந்தில் புத்த பிட்சுக்கள் புத்த மடாலயத்தை வேறிடத்தில் அமைக்க உத்தேசித்தனர்.
அதற்காக அங்குள்ள வெவ்வேறு புத்தர் சிலைகளை இடம் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது ஒரு களிமண் சிலையெனக் கருதப் பட்ட புத்தர்சிலை சிறிதளவு சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டது. சாதாரணமாக இது ஒரு துரதிர்ஷ்டமாகக் கருதப்படும். ஆனால் அதுவே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக அமைந்தது. தங்க புத்தர் தானே வெளிப்பட்டார்.
சிலையில் சிறிது தங்கம் தென்படவே ஜாக்கிரதையாக மேல் பூச்சைப் பிரித்தனர். உள்ளே அற்புதமான தங்க மய புத்தர் தரிசனம் தந்தார்.
அதை முறைப்படி ஆராயவே அதன் மதிப்பு உலகிற்குத் தெரிய வந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய தங்கச் சிலையாக பாங்காக்கில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் தங்க புத்தர்!இதன் எடை மலைக்க வைக்கும் 5.5 டன்கள்! இதன் உயரம் 3.91 மீட்டர்.அகலம் 3.01 மீட்டர். உலகின் மிகப் பெரிய தங்க புத்தர் சிலை இது தான்!

நானும் இந்தத் தங்க புத்தரை தரிசித்து வணங்கும் பாக்கியம் பெற்றேன்.

No comments:

Post a Comment