பிருந்தாவனசாரங்கனை....
பல்லவி
பிருந்தாவன சாரங்கனைக் கண்ணனை
நந்தகுமாரனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அருந்தவம் புரிந்திடும் முனிவரும் தேவரும்
விரும்பிப் பணிந்திடும் கருநீலவண்ணனை
சரணம்
வருந்தித் துதித்திடும் திருந்திய மனிதருக்கு
பெருந்துயர் பிணிகள் இடர்கள் களந்திடும்
மருந்தும் விருந்தும் அவன் திருநாமமே
கருத்தினில் அதனை இருத்தியே கேசவனை
No comments:
Post a Comment